சனி, 12 நவம்பர், 2016

அகத்தியர் மகா வசிய வீபூதி

அகத்தியர் மகா வசிய வீபூதி

கிருபையுள்ள புலத்தியனேவ  சியமென்று
 கெணிதமுடன் சொல்லுகிறே நன்றாய் கேளு
துருவமுள்ள வுருத்திரபூமி யிலே சென்று
 சுகமாக வெந்த அஸ்த்திநீயே டுத்து மைந்தா
அருவமுள்ள அஸ்தியுடன் விஷ்ணு மூலி
 ஆதிசத்தி தன்னுடைய வேருங்கூட்டி க்
கருவையினிச் சொல்லுஅகத்தியர் மகா வசிய வீபூதிகிறேன்க லசப் பாலாற்
 கருணையுடன் றானரைத்தே யுண்டை செய்யே

 புலத்தியனே வசியமுறை ஒன்றை கூறுகிறேன் கேட்பாயாக. சிவனின் பூமியாகிய சுடுகாட்டிற்க்கு சென்று நன்கு வெந்த அஸ்தியை எடுத்துகொள் அத்துடன் விஷ்ணு கிரந்தியின் வேரினை கூட்டி தாய்பால் விட்டரைத்து உருண்டை செய்து வைக்க வேண்டும்..

செய்யடா உருண்டைதனையு லர வைத்துச்
 செம்மையுட னெருவடுக்கிப் புடத்தைப்போடு
மெய்யடா சொல்லிகிறே நீறிப் போகும்
 வேகாந்த மானதொரு நீற்றை வாங்கி
வையடா சவ்வாதுடனேபு  னுகு சேர்த்து
 மார்க்கமுடன் அங்கெனவெ லட்ச மோதி
மையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி
 மார்கமுடன் அரசாரிடன்சென்று பாரே

இவ்வாறு செய்த உருண்டையை நன்கு உலரவைத்து நன்கு எருவடுக்கி புடத்தை போட வேண்டும் புடம் போட்டு வெந்த நீற்றை எடுத்து சவ்வாது ,புனுகு ஆகியவற்றை கூட்டி முறையாக "அங் " என்று ஒரு லட்சம் உரு ஓதி அரசரிடம் சென்று பார் ......

சென்றுமிக நின்றுடனேயி ராச மோகம்
 சிவசிவா செகமோகம் ஸ்ரீவ சியமாகும்
அண்டர் பிரானருள் பெருகிவசிய முண்டாம்
 அப்பனே ஓம் கிலியு றீயு மென்று
பண்டுபோலி லட்சமுரு வெற்றிப் பின்னர்
 பாலகனே லலாடமிசைப் பூசிச் சென்றால்
தொண்டரென்றே சத்ருக்கள்வ ணங்கு வார்கள்
 துஷ்டனென்ற மிருகமெல்லாம்வ  சிய மாமே ...
                                                                               -அகத்தியர் பரிபூரணம்

அவ்வாறு சென்றவுடன் ராஜவசியமாகும். அதுமட்டுமல்லாது செக வசியமும் பெண் வசியமும் உண்டாகும். சிவன் அருள் பெருகி அனைத்தும் வசியமாகும்.

முறையாக அமர்ந்து "ஓம் கிலிறீ" என்று லட்சம் உரு கொடுத்து விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டால் எதிரிகள் உன்னை வணங்குவார்கள். துஷ்ட மிருகமெல்லாம் வசியமாகும் ...

புதன், 14 செப்டம்பர், 2016

பணம் மற்றும் செல்வவரவு தரும் ஸ்ரீ தனவர்ஷினி லக்ஷ்மி மந்திர பிரயோகம்

பணம் மற்றும் செல்வவரவு தரும் ஸ்ரீ தனவர்ஷினி லக்ஷ்மி மந்திர பிரயோகம்

பிரயோக முறை :-

1.ஏதேனும் ஒரு வளர்பிறை புதன்கிழமை அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்ததில் எழுந்து குளித்து முடித்துப் புத்தாடை அணிந்து மஞ்சள் நிறத்   துணி விரித்து அதில் சிறிது பன்னீர் தெளித்து அதன் மீது கிழக்கு  நோக்கி அமரவும்.

2.நெய் விளக்கேற்றி ஸ்ரீ லக்ஷ்மி யந்திரத்தைக் குங்குமம் மற்றும் பன்னீர் கலந்த நீரால் கழுவி,ஒரு பலகையின் மேல் வெள்ளைத்துணி விரித்து அதில் ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டின் மேல் அந்த யந்திரத்தை வைத்து யந்திரத்திற்கு அட்சதை,குங்குமம் ,பூக்களால் மூலமந்திரம் 108 தடவை ஜெபித்து அர்ச்சனை செய்யவும்.

3.வெற்றிலை,பாக்கு,பால்,பழங்கள்,பாயசம் படைக்கவும்.

4. பின்னர் வலது உள்ளங்கையில் சிறிது நீர் ஊற்றி ஸ்ரீ லக்ஷ்மி தேவியை மந்திரம் சித்தியாக வேண்டி மூன்று முறை மூலமந்திரம் ஜெபித்து அந்த நீரை அருந்தி துளசி மாலையால் மந்திரம் ஜெபிக்கத் தொடங்கவும்.

தியான ஸ்லோகம் :-

ப்ராஹ்மீம் ச வைஷ்ணவீம் பத்ராம் சதுர் புஜாம் ச சதுர்முகீம் |
த்ரிநேத்ரம் கட்க த்ரிசூல சக்ர கதா தராம் |
பீதாம்பர தராம் தேவீம் நானாலங்கார பூஷிதாம் |
தேஜபுஞ்ச தரீம் ஸ்ரேஷ்டம் த்யாயேத் பால குமாரிகாம் ||


மூலமந்த்ரம் :-

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனவர்ஷிணி |
லக்ஷ்மீர் ஆகச்ச ஆகச்ச |
மம க்ருஹே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா |

ஒரு மாதம் கழித்து பூஜைக்கு உபயோகித்த பொருள்களை ஆற்றில் விட்டு விடவும் .நாளுக்கு நாள் செல்வம் பெருகத் தொடங்கும்.

ஹரிவராசனம் விஸ்வமோகனம்

ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
மிகச் சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும், பிரபஞ்சத்தையே தன் முறுவலால் மோகிக்கச் செய்பவரும், ஹரிதம் என்னும் குதிரையில் (ஹரித: என்றால் சூரியன், அவனது தேரில் உள்ள ஏழு குதிரைகளின் பெயர் ஹரிதம்)
பவனி வரும் சூரியனால் ஆராதிக்கப்படும் பாதங்களை உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும்,
சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணகோஷத்தால் மகிழ்பவரும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்காக நடனமாடுபவரும், உதிக்கும் சூரியனொத்த ஒளிமயமானவரும், பூத நாயகனுமாகிய ஹரி-ஹர புத்ர தேவனை
ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
உலகின் உண்மைப் பொருளாகவும், உலக உயிர்களுக்கு நாயகனாகவும் தன்னை சரணடைந்தவர்க்கு எல்லாவளமும் அளிப்பவரும், ஓங்கார மந்த்ரமாய் இருப்பவரும், இசையில் ப்ரியம்/நாட்டம் உடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.
துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
குதிரை வானரும், அழகிய முகமுடையவரும், கதாயுதம் ஏந்தியவரும்,தேவர்களால் வர்ணிக்கப்படுபவரும், குருவைப் போல ப்ரியம் உள்ளவரும், கீர்த்தனங்களில் ப்ரியமுடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
மூன்றுலகிலும் அர்ச்சிக்கப்படு
பவரும், எல்லா தெய்வங்களின் அம்சமாக விளங்குபவரும், மூன்று கண்களை உடையவரும், சிறந்த குருவாக விளங்குபவரும், வேண்டுவதை அளிப்பவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.
பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சம்சார பயத்தை போக்குபவரும், பக்தருக்கருள்வதில் தந்தை போலும், உலகத்தை தன் மாயையால் மயக்குபவரும், விபூதி தரித்தவரும், வெள்ளை யானையை வாகனமாக கொண்டவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன
களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
மதுரமான, மிருதுவான புன்முறுவல் உடையவரும், சுந்தர முகமுடையவரும், இளமையும், மென்மையும் உடையவரும், மயங்க வைக்கும் உடலமைப்புக் கொண்டவரும், யானை, சிங்கம், குதிரை போன்ற்வற்றை வாகனமாக கொண்ட
ஹரி-ஹர புத்ர தேவனை
ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணடைந்தவர்களிடத்து அன்புடையவரும், நினைத்ததை உடனே அளிப்பவரும், வேதங்களை ஆபரணமாக அணிந்தவரும், ஸாதுக்களிடத்து
வசிப்பவரும், வேதகோஷங்களில் மகிழ்பவரும், கீதங்களில் லயிப்பவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்

வியாழன், 30 ஜூன், 2016

பிறையதிக சித்து

பிறையதிக சித்து

பிறையதிக சித்து
பாரப்பா இன்னுமொரு சேதிகேளு
 பண்பான பிறையதிகச் சித்து சொல்வேன்
காரப்பா திகைப்பூண்டு தனைக்கருக்கி
 கருவான ஏரண்டத் தெண்ணைவிட்டு
வீரப்பா செய்யாமல் கல்வத்தாட்ட
 விபரமுள்ள மைபோல வெளிச்சம் காணும்
சேரப்பா சிமிழ்தனிலே பதனம்பண்ணித்
 திருவான பதிநோக்கித் திலகம் போடே


போட்டவுடன் அமாவாசை இருட்டில் மைந்தா
 போக்குடனே நாலு திக்கும் பார்த்தாயானால்
நாட்டமுடன் பிறையதிக மாகத் தோன்றும்
 நாரான மானிடர்க்கு அப்படியே காணம்
வாட்டமுடன் இடது கண்ணை மூடிப்பார்த்தால்
 வளமான சூரியன் போல் வரிசை காணும்
காட்டாதே உலகிற்க்கு இந்தநூலை
 கர்தவிதி தீர்த்தவர்க்கு காட்டு காட்டே
                                                                           - அகத்தியர் 64 சித்துகள்

பொருள்:

                     திகை பூண்டை கருக்கி ஏரண்டதென்னை விட்டு  கல்வத்திலாட்ட  அது மை போலாகும். அதை ஒரு சிமிழில் பதனம் பண்ணவும். அம்மாவசை இரவில் அந்த மையை எடுத்து திலகமிட நாலு திசைகளும் வெளிச்சமாக தோன்றும். இடது கண்ணை மூடி வலது கண்ணில் பார்த்தால் சூரிய வெளிச்சத்தில் பார்ப்பது போல தெரியும்...  இதுவே பிறையதிக சித்துவாகும்

புலிப்பாணி வெற்றிலையில் மை

புலிப்பாணி வெற்றிலையில் மை

                   - புலிப்பாணி  வெற்றிலையில் மை
"பாரப்பா நிலவானை மலைகள் தோறும்
பண்பாகத் தானிருக்கு மறிந்து பாரு
வாரப்பா வதினுடைய விரையைத் தானும்
வளமாகப் பத்துபல மெடுத்து வந்து
சீராப்பா தலைமஞ்சள் கொடியு மாவுஞ்
சிறப்பாக முப்பாக முப்பூவும் வராகள் கூட்டித்
தேரப்பா வில்லைதட்டி யுலரப் போடு
திறமாக யுலர்த்தியதைத் தயிலம் வாங்கே."

- புலிப்பாணி -

மலைகளில் நிலவாகை என்று ஒருவகை செடி வளர்ந்திருக்கும்அந்த செடியைக் கண்டு பிடித்து அதன் விதையில் பத்து பலம் எடுத்து அதனுடன் தலைமஞ்சள் கொடியின் மாவு ஒரு விராகனும்முப்பூ ஒரு விராகனும் சேர்த்து நன்றாக அரைத்து வில்லைகளாகத் தட்டி அந்த வில்லைகளை நன்கு உலரவைத்து பின்னர் அதில் இருந்து குழித்தைலம் இறக்கி எடுத்துக் கொள்..

"வாங்கியே ஆள்காட்டி முட்டை தன்னை
வளமான சிற்றண்டத் தயிலம் போலே
தாங்கியே வாங்கியந்தத் தயில நேரே
தயவாகத் தானெத்துச் சிமிழிதனில் வைத்து
ஓங்கியே களவுமுதற் சூன்யம் யாவும்
உற்றுப்பார் தோற்றுமடா கள்ள மெல்லாம்
நீங்கியெ யதுகண் பிடித்துக் கொண்டு
நினைவாகக் குருபாதம் பணிவாய்த் தானே"

- புலிப்பாணி -

ஆள்க்காட்டி என்ற குருவியின் முட்டைகளைக் கொண்டு சிற்றண்டத்தைலம் போல தைலம் இறக்கிஅந்த தைலத்துடன் முன்னர் செய்த குழித் தைலத்தையும் சம அளவில் கலந்து சிமிழ் ஒன்றில் சேமித்து வைத்தல் வேண்டும்.

களவு போனாலோ அல்லது யாராவது சூனியம் செய்வினை போன்றவை செய்தாலோ அவற்றை செய்தவர் யார் என்று அறிய ஒரு வெற்றிலை ஒன்றை எடுத்து அதில் சிமிழில் சேமித்த தைலத்தில் சிறிது எடுத்து தடவி குருநாதரை நினைத்து வணங்கி பார்த்தால் திருடியதுசூனியம் செய்வினை ஏவல் செய்தது யார் என்று அதில் தெளிவாகத் தெரியும் என்கிறார் புலிப்பாணி.

போகர் பச்சோந்திவித்தை

போகர் பச்சோந்திவித்தை

போகர் பச்சோந்திவித்தை
ஒரு பவுன் தங்கம் வாங்கி அதை இரண்டு காசாக அடித்துஒன்று லக்ஷ்மி ஒன்று விஷ்ணு  உருவம் பதித்து எடுத்து கொண்டு,இரண்டு பச்சோந்தி,ஆணும் ,பெண்ணும் புணரும் சமயம் பிடித்து வந்து ஆணின் வாயில் பெண் காசும் ,பெண்ணின் வாயில் ஆண் காசும் செலுத்திஆற்றில் அக்கறையில் ஒன்று இக்கறையில் ஒன்று புதைத்துநடு ஆற்றில் நின்று கொண்டு பைரவ மந்திரத்தை தினம் 1008 உரு வீதம் ஏழு நாட்கள் ஜெபம் செய்தால்ஆண் பச்சோந்தி பெண் பச்சோந்தியுடன் வந்து சேரும். உடனே எடுத்து அந்த பச்சோந்திகளை ஆற்றில் வீசி விட்டு அந்த காசுகளை பத்திரப்படுதிக் கொள்ளவும். 
           இதில் பெண் உருவம் உள்ள காசை ஒரு பெட்டியில் வைத்து விட்டு ,
ஆண் காசை விற்பனை செய்து விடலாம்அது பெண் காசு உள்ள பெட்டிக்கு வந்து விடும். இதை தினம் விற்றாலும் நம்மிடம் வந்து சேரும்பெண் காசு எங்கு உள்ளதோ அங்கு ஆண்  காசு வந்து விடும். இதை ஏழைகளிடம் விற்பனை செய்வது பாவமாகும். உலோபிகருமி,சண்டாளன் இவர்களிடம் விற்பனை செய்து ஏழைகளுக்கு உதவலாம்.

பைரவ மந்திரம்:
                                ஓம் ஹ்ரீம் வாம் வடுகாயா ஆபத்தாறணாய வடுகாய ஹ்ரீம் ஓம்...."

 இந்த மந்திரத்தை ஜெபம் செய்ய வேண்டும்

ஸ்ரீ முனீஸ்வரன் பம்பை உடுக்கை

ஸ்ரீ முனீஸ்வரன் பம்பை  உடுக்கை 

அருள்வாக்கு ,போய் ஓட்டல் ,முதலிய     தெய்விககாரியங்களு க்கு  நல்ல து

செய்வினைதுன்பம் விலக 
ஆவிஏவல் முதலியவைகளிலிருந்து விடுபட 
எதிரிகள் நம்மைக்கண்டு அடங்க 
  செய்வினைமறைமுக எதிரி விலக
    கர்மவினைஊழ்வினை விலக.

ஸ்ரீ அம்மன் காப்பு

ஸ்ரீ அம்மன்  காப்பு    
அன்னை  கோவில் பூஜை செய்து வழங்கபடுகின்றன         
அருள்வாக்கு ,போய் ஓட்டல் ,முதலிய     
செல்லும் இடங்களில் காரியங்கள் நிறைவேற 
வாழ்க்கை பிரகாசமடைய 
செய்வினைமறைமுக எதிரி விலக 
கல்வியில் சிறக்க 
குழந்தைபாக்கியம் உண்டாக 
 கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்க 
எதிர்பார்த்த பணவரவுஐஸ்வர்யம் உண்டாக 

 எதிர்பார்த்தப்படியே வீடுமனை வாங்க நினைத்த காரியம் வெற்றி அடையவிளையாட்டுத்துறையில் புகழ்பெற
 விவசாயத்தில் நல்ல மகசூல் பெற 
பொதுவான தோஷங்கள் விலக